Augastine Jebakumar Kavithaigal Part - 6
சபையை தூங்க வைக்கிறான்
சத்துரு சந்தடியில்லாமல்
ஆவிக்குரிய போர்வையின்
ஆடலில், மூடலில்
ஆழ்ந்த நித்திரையில்
உலகின் மடியிலே
நீதிபரரின் சத்தத்தையும்
நித்திய நினைவினை மறக்கவே
நீதி சரிக்கட்டும் நாளையும்
நினைவில் இருந்து அகற்றிடவே
தூசி தட்டி எழும்பிடுவோம்
தூரம் உண்டு பயணமே
தூக்கம் உதறித் தள்ளியே
தூரப் பார்வை கொண்டோராய்
வேதமின்றி மார்க்கமில்லை
வேதனை நீங்க வழியுமில்லை
போதனைகள் அனைத்துமே
சோதனைக்காரனைக் காட்டிடட்டுமே
விழிப்புணர்வு வீறு கொள்ளச் செய்யும்
களிப்பாட்டம் புறம்பே தள்ளும்
கர்த்தரின் பட்சம் நிற்கச் செய்யும்
கர்ஜனையோடு போர் புரியவே
கருத்துடனே செயல்படுவீர்
கர்த்தரின் சத்தம் தொனிக்கச் செய்வீர்
காலம் இனி செல்லாதே
காத்திடுவோம் அழைப்பதனையே
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோதரர் D. அகஸ்டின் ஜெபக்குமார்.
மேற்கோள் :
ஜெம்ஸ் சத்தம் - மாத இதழ் , April 2020,பக்கம் : 12
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்